வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

'திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு' என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் 'எண்பதுகளின் தமிழ் சினிமா'. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் ஊடாடுகிற இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது. சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று …

Continue reading வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

Antman: The Quantum Caveman

When Adam came out of the cave that dreadful night, he saw an amazing phenomenon, a deafening thunder rumbling on a nearby leafless tree, setting it ablaze. Very sight of reddish yellow flames was never seen before, though he has seen sun coming up with this same bright yellow shade everyday up his sky. But …

Continue reading Antman: The Quantum Caveman

Amistad – a ship of Hope!

சிவில் வாருக்கு முந்தைய அமெரிக்காவின் மிக முக்கிய வழக்கு amistad கப்பலில் வந்த ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களின் உடமை குறித்தது. தெற்கு அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாகவே தொடரவும், வடக்கு அமெரிக்க மாகாணங்கள் அவற்றை படிப்படியாக தளர்த்தவும் முயன்று கொண்டிருந்த தருணத்தில் தான் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட மக்களோடு, amistad கப்பல் வந்து சேர்கிறது. அது அமெரிக்க தேர்தல் நேரம் வேறு; வான் பூரன் தன் சீட்டை தக்கவைத்துக்கொள்ள தெற்கு மாகாண அடிமை வியாபார பிரபுக்களோடு …

Continue reading Amistad – a ship of Hope!

வெக்கை – அசுரன்

15OCT2019 15 வயது சிதம்பரம் செய்யும் கொலை ஒன்று அவனையும், அவன் குடும்பத்தையும் அலைச்சலுக்கு உட்படுத்துகிறது. சாதாரண கொலை - பழிவாங்கல் கதை, சாதி கட்டமைப்பின் கண் கொண்டு பார்க்கும்போது சமூக அநீதியின் வெளிப்பாடாகப்படுகிறது.சிதம்பரம் "வடக்கூரானுக்கும், ஜின்னிங்பேக்டரிக்காரனுக்கும் ஏன் கோர்டும், போலீசும் தண்டனை குடுக்கல", என்று எழுப்பும் கேள்வி நம் மொத்த சமூகத்துக்குமானது. போலீசும், கோர்டும் சாதிக்கு உட்பட்டவையே என்று தெரியும்போது உண்டாகும் அருவருப்பும் வெக்கையுமே இந்தக் கதைக்கு மூலம். எளியதொரு கதையின் பின்னணியில், சிதம்பரம் - …

Continue reading வெக்கை – அசுரன்

ஒரு எளிய பாதையின் பாடல்…

படம்: பதேர் பாஞ்சாலி (1955)இயக்கம்: சத்யஜித் ரே மீளாத துயரமே ஆட்டிப்படைக்கும் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் சின்னஞ்சிறு மகிழ்ச்சி, அதன் குழந்தைகள். விளையாட்டுப் பிள்ளையான பெரியவள் துர்கா நமக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் ஆகிறாள். தோட்டத்தில் பழங்கள் திருடி பாட்டிக்குத் தருவதும், பின்னர் அம்மாவிடம் திட்டு வாங்குவதுமாக வரும் துர்கா பாத்திரம் ஏற்ற பெண்ணை எப்படித்தான் அம்மாவின் ஜாடையிலேயே தேடிப்பிடித்தார்களோ! அப்பாவும் சின்னவன் அப்புவும் கூட ஒரே ஜாடை! அப்பு பிறந்தவுடன் நல்லதே நடக்கும் என்று …

Continue reading ஒரு எளிய பாதையின் பாடல்…