அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

நூல் அறிமுகம்: "அரசியல் சிந்தனையாளர் புத்தர்" புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் "அரசியல் சிந்தனையாளர் புத்தர்". நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்! 2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் …

Continue reading அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

'திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு' என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் 'எண்பதுகளின் தமிழ் சினிமா'. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் ஊடாடுகிற இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது. சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று …

Continue reading வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா