கற்பிதம்

கடவுளுக்குக் காதுகள் இல்லையாம்...வேண்டுதல்கள் கேட்கஇசைக்கு செவிசாய்க்கஇறைஞ்சலுக்கு இறங்கநீங்கள் திட்டுவதைக் கேட்ககடவுள் பெயரால் அடிவாங்கியமனிதனின் கதறல் கேட்ககடவுளுக்கு காதுகளே இல்லையாம்! கடவுளுக்கு கண்கள் இல்லையாம்...தன் பக்தனைப் பார்க்கஅவன் படும் பாடுகளைக் காணகடவுள் பெயரால் அரங்கேறும்வன்முறைகள் சகிக்க, எனகடவுளுக்கு கண்களும் இல்லையாம்! கடவுளுக்கு கைகள் இல்லையாம்-அபயம்,வேல் சூலம் வாள் வீச்சரிவாள்,ஜபமாலை,கமண்டலம்,வேதம் வீணைஎன இவையும் பிறவும் தாங்ககடவுளுக்குக் கைகளும் இல்லையாம்! காதும் கண்களும் கைகளும் இல்லாதகடவுளை கண்டதுண்டா நீங்கள்?அடக் கடவுளே இல்லையாம்சென்று வேலையைப் பாருங்கள்...~அமரன் 08-03-2020

அறியா மொழியில் ஓர் பயணம்!

தூக்கக் கலக்கமும், பசியும், அறியாத மொழி தரும் அயர்ச்சியும், இடுக்கிக் கொண்டு தடதடக்கும் மலைப் பாதைகள் ஊடே பயணித்து வந்த உடல் வலியும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையில், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், கட்கோராவில் நடந்த வாக்குவாதம் ஒன்று நேற்று நடந்தது போல் ஞாபகம் இருக்கிறது. ஹரியின் தம்பி கோகுல் அடுத்த நாள் காலை உதாய்ப்பூர் செல்ல வேண்டும். பிலாஸ்புரில் 4 மணிக்கு ரயில் இறங்கி, அங்கிருந்து 80கிமீ உள்ள கட்கோராவுக்கு வருவதற்கே எங்களுக்கு கிட்டத்தட்ட …

Continue reading அறியா மொழியில் ஓர் பயணம்!