அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத …

Continue reading அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா

இந்திய அரசின் ஏகாதிபத்தியக் கரங்கள் சூழல் செயல்பாட்டார்களை ஒடுக்குவதின் சமீபத்திய உதாரணம் திஷா ரவி. ஆனால் அவர் முதலானவர் அன்று; எண்ணற்ற பழங்குடியின மக்களை கொன்று, கைதாக்கி, துன்புறுத்திய வரலாறு இந்திய அரசுக்கு உண்டு! குனி சிகாகா, 20 வயதேயான ஒடிசாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினப் பெண். தனது மண்ணில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் (வேதாந்தா) சுரங்கம் அமைக்க தன்னாட்டு அரசே அவர்களின் மூதாதையர் வாழ்ந்த மண்ணை பிடுங்க முயன்றது; உள்ளூர் அரசியவாதிகள், போலீஸ், அதிகாரிகள் …

Continue reading தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா