தெரிந்து கொள்ளுங்கள்: குனி சிகாகா

இந்திய அரசின் ஏகாதிபத்தியக் கரங்கள் சூழல் செயல்பாட்டார்களை ஒடுக்குவதின் சமீபத்திய உதாரணம் திஷா ரவி. ஆனால் அவர் முதலானவர் அன்று; எண்ணற்ற பழங்குடியின மக்களை கொன்று, கைதாக்கி, துன்புறுத்திய வரலாறு இந்திய அரசுக்கு உண்டு!

குனி சிகாகா, 20 வயதேயான ஒடிசாவின் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினப் பெண். தனது மண்ணில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் (வேதாந்தா) சுரங்கம் அமைக்க தன்னாட்டு அரசே அவர்களின் மூதாதையர் வாழ்ந்த மண்ணை பிடுங்க முயன்றது; உள்ளூர் அரசியவாதிகள், போலீஸ், அதிகாரிகள் துணையோடு வேதாந்தா நியாம்கிரி மலைப்பகுதிகளில் பாக்ஸைட் அகழ்ந்தெடுக்க இப்பழங்குடி மக்களை வேறிடத்துக்குச் செல்ல அழுத்தம் தந்தது.

இதற்கு எதிராகப் போராடிய குனி சிகாகாவை 2017ல், நள்ளிரவில் அவர் வீட்டில் வைத்து கைது செய்தது போலீஸ். அதற்கு அவர்கள் சொல்லிய காரணம்: குனி ஒரு ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் என்று!!

பழங்குடியின மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க அரசு சொல்லும் வழக்கமான பொய் தான் இது. 2010இல் இதே போல் லாடா சிகாகாவை கைது செய்து தான் மாவோயிஸ்ட் என்று ஒத்துக்கொள்ளச் சொல்லி லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்து, பின் மக்கள் எழுச்சிக்குப் பின்னரே விடுதலை செய்தது.

திஷா ரவி போன்றோருக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் இவர்களுக்கு கிட்டுவது சந்தேகமே. காரணம், எங்கோ ‘நமக்கு சம்பந்தமில்லாத’ இடத்தில் இருந்து போராட்டம் செய்பவர்கள்; ஆங்கில அறிவற்றவர்கள்; சிலர் கருத்துப்படி அவர்கள் உண்மையாகவே ‘மாவோயிஸ்ட்டாகவும்’ இருக்கலாம்! இவ்வளவு தான் நம் அக்கறை!!!

பன்னாட்டு நிறுவனங்களும், அரசும் இவ்வாறு உரிமைக்குப் போராடும், கேள்வி எழுப்பும் எளியோரை நசுக்கிக் கொண்டே இருக்கும்; புரிதலும், அதனால் நாம் அளிக்கும் ஆதரவும் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒன்று.

இது அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், வேதாந்தாவுக்குமான தேசம் மட்டுமல்ல, திஷா ரவிக்கும், குனி சிகாகாவுக்குமான தேசமும் கூட!!

படம் நன்றி: @thebigfatbao instagram page #amar2021 #kuni_sikaka #DishaRavi

Leave a comment