அறிவியல் உலகின் புரட்சியாளர் டார்வின்!

காமிராவும், பைனாகுலரும் எடுத்துக்கொண்டு பறவைகள் பார்க்கிறேன் என்று பக்கத்தில் இருக்கும் குட்டைக்குக் கிளம்பும் என்னைப் போன்றவர்களையே, தேவையில்லாம ஊர் சுத்துறான் பாரு என்று வினோதமாகப் பார்ப்பவர்கள் இன்று இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலில் உலகம் முழுதும் சுற்றி உயிரினங்களை காணப் போகிறேன் என்று கிளம்பிய டார்வினை இந்த உலகம் எப்படிப் பார்த்திருக்கும்? ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் டார்வின் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாடு, மனித அறிவியல் சமூக தளத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கியது …

Continue reading அறிவியல் உலகின் புரட்சியாளர் டார்வின்!

ஒரு வானம்பாடியின் பாடல்

கரோனா தந்த முடக்கம் பலருக்கு பலதையும் கற்றுத் தந்திருக்கும். எனக்கு கற்றுத் தந்தது முக்கியமாய் மூன்று விஷயங்கள்: 1. குறள் என்னும் பொதுமறையின் நேர்த்தியும் அழகும் 2. அசாத்தியப் பொறுமை 3. கத்திரிக்காயை ரசித்தல். முதலிரண்டையும் பற்றி நிறைய பேச விரும்புகிறேன்; இந்தக் கட்டுரை கொஞ்சம் பொறுமை பற்றியது; மூன்றாவதைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்வதற்கில்லை... முதலில் போன்றல்லாமல், இப்போதெல்லாம் பறவைகள் காணல் செல்லும்போது முன்னம்விட பொறுமையாகப் பார்ப்பதாக உணர்கிறேன். சீக்கிரம் வீட்டுக்குப் போய் என்ன செய்யப் …

Continue reading ஒரு வானம்பாடியின் பாடல்