பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் 2

பாடல்கள் பல கொண்டிருக்கும்; மதியமோ வேனில் வெயிலோ அயர்ச்சி தாராது இதன் ராகத்துக்கு; கருப்பு வெள்ளையாய் வால் தூக்கி மர உச்சியில் இசைத்து இணை கவரும்!

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 1

இந்தப் பறவை நீருக்குள் கண்ணாமூச்சி ஆடும்; கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாலும் ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் மீண்டு வந்து ஜாலம் புரியும். புள்ளி மூக்கு வாத்தை ஒரு கணக்காக வைத்துக் கொண்டால், அதைவிட மிகச்சிறிய பறவை- முக்குளிப்பான் (Little Grebe). முக்குளிப்பானின் அறிவியல் பெயர்- Tachybaptus ruficollis. பொதுவாக உயிரினத்துக்கு இடும் அறிவியல் பெயர்கள், அந்த இனத்தின் உடல் அடையாளம் அல்லது அதன் செயல்பாடுகளைக் குறித்த லத்தீன் காரணப் பெயர்களாக இருக்கும். அந்த வகையில் Tachybaptus என்னும் …

Continue reading பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 1

பானிபட் என்னும் அறுவை சிகிச்சை

Netflixல suggestion ஆக வந்துச்சுன்னும், ஜோதா அக்பர் எடுத்த அசுதோஷ் கோவாரிக்கர் படமாச்சேன்னும் நம்பி பானிபட் பாக்க ஆரம்பிச்சேன். 2.30 மணி நேர படத்தை ஓட்டி ஓட்டி 30 நிமிஷத்துல பாத்துட்டேன். ஹிந்துத்துவா பிரச்சாரப் படம்னு தெரியாம போயிருச்சு. அப்பட்டமா முஸ்லீம் மன்னர்கள் வெளில இருந்து வந்ததுனால நம்ம நாட்டு எதிரிங்கன்னும், மராட்டா மன்னர்கள் இந்துக்கள்னால நம்மவர்கள்ன்னும் படம் பூரா சொல்லிட்டு சுத்துரானுங்க. இதுல என் சந்தேகம் என்னன்னா அந்த காலத்துல பூரா இந்தியா ஒரே நாடு …

Continue reading பானிபட் என்னும் அறுவை சிகிச்சை

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன்

பைனாகுலரில் அந்தக் கருப்பு வெள்ளைப் பறவையைக் கண்டேன். தலையிலும் முதுகிலும் கருப்பு, கூடவே கருப்புக் கொண்டை; கழுத்தும் அடிவயிறும் வெள்ளை நிறம். "அதோ பாருங்க அண்ணா, Jacobin Cuckoo", என்று கூட வந்த அண்ணனிடம் சொன்னேன். "Jacobin cuckoo வா? இது Pied Crested Cuckoo ஆச்சே?" என்றார். எனக்கு Pied Crested தெரியாது, அவருக்கு Jacobin தெரியாது என்பதால் இருவரில் யார் சரியாகச் சொன்னோம் என்ற சந்தேகம் உண்டானது. வீட்டுக்கு வந்து பறவைகள் கையேட்டில் பார்த்ததில், …

Continue reading பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன்

பரிசளித்தல்

யார் யாருக்கோஎதை எதையோபரிசளிக்க எண்ணிசிலருக்கு புத்தகமும்சிலருக்கு பேனாவும்சிலருக்கு மட்டும் புன்னகையும்வாங்கி வைத்தேன் அவர்களெல்லாம்நினைவிலன்றிநிகழ்வில் இல்லாததால்முகவரி எழுதாஅஞ்சல் போலும்இலக்கொன்று இல்லாஅம்பினைப் போலும்என்னிடமே அவைதிரும்பின காண். அவைகளையும்அபத்தமானதொருஆனந்த அதிர்ச்சியில்இப்போதுதான் பார்ப்பது போல்எனக்கேயார் யாரோ அளித்தபரிசுகளாய்சுவீகரிக்கிறேன். 11.02.2017