கோடுகள்

ஓவியம் வரைகிறாய்கோடு கோடாய்கோடுகள் புற்கள் ஆகும் அதிசயம்!கோடுகள் கிழவியின் மயிராகிறதுகோடுகள் நிலவும் பரிதியும்கோடுகள் மானாகும் முயலாகும்கோடுகள் பறவையும் கிழிஞ்சலும்கோடுகளே நீயும் நானுமெனநாமே ஒரு கோட்டோவியமாய்! உன் கோடுகளுக்குள்ள தூரத்தைஎப்படி முடிவு செய்கிறாய்?புற்களுக்கு ஒரு கணக்குகிழவிக்கு ஒரு கணக்குநிலவு பரிதி புள்ளி மான்முயல் பறவை கிழிஞ்சல்என தூரங்கள் வெவ்வேறாய்...இருபுள்ளியின் இடையிலுள்ளமிகச்சிறிய தூரத்தைக் கோடு என்கிறது அறிவியல்!இனி, உனக்கும் எனக்குமுள்ள தூரம் தான் கோடா? உன் ஓவியத்தில் நான் ரசிப்பதுகோடுகளை அல்ல...அவை நிரப்பாமல் விட்ட இடைவெளியை!

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 4

கடந்த வாரம் பறவைக் காணுதலுக்கு சென்று வந்ததில், முக்கியமான ஒரு அறிவியல் உண்மையைத் தேடி அறிந்துகொண்டேன். ஒரு கேள்வி எழுந்து, அதைப்பற்றி வல்லுநர் பலரிடம் கேட்டறிந்து, தேடிப் படித்துத் தெரிந்து கொள்வது அருமையான அனுபவம்! அதையொட்டி இந்தக் கட்டுரையை அமைக்கிறேன்... இருகண் நோக்கி (Binoculars) வழியே பார்த்தபோது, அந்த ஆள்காட்டிப் பறவையின் சிறகுகளில், இது வரை நான் பார்த்தேயிராத ஒரு மினுக்கம் கண்டேன்; அதுவும் அந்த பறவைக்கு சம்பந்தமே இல்லாத பச்சை நிறத்தில், அதன் தோளில் நான் …

Continue reading பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 4

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 3

கருப்பு வெள்ளையாய் வாலாட்டிக் கொண்டே வளையவரும் கண்கவர் பறவை இது. நீர்க் கரையோரம் பூச்சி பிடித்துத் தின்னும்; காக்கைக்கு வீட்டு மதிலில் வைத்தச் சோற்றையும் தின்னும்!