அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத …

Continue reading அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

நூல் அறிமுகம்: "அரசியல் சிந்தனையாளர் புத்தர்" புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் "அரசியல் சிந்தனையாளர் புத்தர்". நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்! 2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் …

Continue reading அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

Introducing the vows of Navayana

Most of us know Dr.B.R.Ambedkar as architect of Indian Constitution, or saviour of Dalits; I'm sure some of the readers also knew of his conversion to Buddhism as the last resort to relieve oneself from the oppression of casteist Hinduism. The conversion to Navayana Buddhism by 800,000 people, on 14 October 1956 at Deeksha Bhoomi, …

Continue reading Introducing the vows of Navayana

கற்பிதம்

கடவுளுக்குக் காதுகள் இல்லையாம்...வேண்டுதல்கள் கேட்கஇசைக்கு செவிசாய்க்கஇறைஞ்சலுக்கு இறங்கநீங்கள் திட்டுவதைக் கேட்ககடவுள் பெயரால் அடிவாங்கியமனிதனின் கதறல் கேட்ககடவுளுக்கு காதுகளே இல்லையாம்! கடவுளுக்கு கண்கள் இல்லையாம்...தன் பக்தனைப் பார்க்கஅவன் படும் பாடுகளைக் காணகடவுள் பெயரால் அரங்கேறும்வன்முறைகள் சகிக்க, எனகடவுளுக்கு கண்களும் இல்லையாம்! கடவுளுக்கு கைகள் இல்லையாம்-அபயம்,வேல் சூலம் வாள் வீச்சரிவாள்,ஜபமாலை,கமண்டலம்,வேதம் வீணைஎன இவையும் பிறவும் தாங்ககடவுளுக்குக் கைகளும் இல்லையாம்! காதும் கண்களும் கைகளும் இல்லாதகடவுளை கண்டதுண்டா நீங்கள்?அடக் கடவுளே இல்லையாம்சென்று வேலையைப் பாருங்கள்...~அமரன் 08-03-2020

புத்தம் சரணம்

பவுத்தக் கருத்தானது, எப்படி சமயம் என்னும் தளத்தில் நில்லாது வாழும்முறை ஒன்றாகப் பரிமாணம் கொள்கிறது என்பதையும் அறிகிறோம். குருகுலத்துக்கு மாற்றாக யாருமே கேள்வி கேட்கலாம் என்கிற சங்கம் முறை, பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை பாராட்டாத சமத்துவம் வாய்ந்த மாற்றாகவும் அமைகிறது.

இளைஞர்களுக்கான புத்தர்!

அண்மையில் குலுக்கை youtube சேனலில் பேராசிரியர் கருணானந்தன் அவர்களது, பௌத்தம் மற்றும் சமணம் குறித்த உரையைக் காண நேர்ந்தது.  அவர் அதில் பௌத்தத்தின் முக்கியக் கூறுகளாக குறிப்பிட்டுக் கூறிய அனாத்ம வாதமும், அநித்ய வாதமும் என் கவனத்தைத் தூண்டின. அனாத்ம வாதம் என்பது ஆத்மா என்னும் ஒன்றே இல்லை என்ற புத்தரின் வாதம். அநித்ய வாதம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் உலகின் நிலை இல்லாத தன்மையை குறிக்கும். ஆத்மா என்பது மனிதரின் கற்பனை; ஆத்மா இருப்பது கொண்டு …

Continue reading இளைஞர்களுக்கான புத்தர்!