ஒரு சிறு இசை – வண்ணதாசன்

மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது: "எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"

ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

(ஆகஸ்ட் 2020இல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிற்று) ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், ஆலையை மூடியது சரியே என்று நேற்று அமைந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் சில: Economic considerations can have no role to play while deciding the sustainability of a highly polluting industry. When it comes economy pitted against environment, environment will reign supreme. …

Continue reading ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

கற்பிதம்

கடவுளுக்குக் காதுகள் இல்லையாம்...வேண்டுதல்கள் கேட்கஇசைக்கு செவிசாய்க்கஇறைஞ்சலுக்கு இறங்கநீங்கள் திட்டுவதைக் கேட்ககடவுள் பெயரால் அடிவாங்கியமனிதனின் கதறல் கேட்ககடவுளுக்கு காதுகளே இல்லையாம்! கடவுளுக்கு கண்கள் இல்லையாம்...தன் பக்தனைப் பார்க்கஅவன் படும் பாடுகளைக் காணகடவுள் பெயரால் அரங்கேறும்வன்முறைகள் சகிக்க, எனகடவுளுக்கு கண்களும் இல்லையாம்! கடவுளுக்கு கைகள் இல்லையாம்-அபயம்,வேல் சூலம் வாள் வீச்சரிவாள்,ஜபமாலை,கமண்டலம்,வேதம் வீணைஎன இவையும் பிறவும் தாங்ககடவுளுக்குக் கைகளும் இல்லையாம்! காதும் கண்களும் கைகளும் இல்லாதகடவுளை கண்டதுண்டா நீங்கள்?அடக் கடவுளே இல்லையாம்சென்று வேலையைப் பாருங்கள்...~அமரன் 08-03-2020

ஒரு எளிய பாதையின் பாடல்…

படம்: பதேர் பாஞ்சாலி (1955)இயக்கம்: சத்யஜித் ரே மீளாத துயரமே ஆட்டிப்படைக்கும் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் சின்னஞ்சிறு மகிழ்ச்சி, அதன் குழந்தைகள். விளையாட்டுப் பிள்ளையான பெரியவள் துர்கா நமக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் ஆகிறாள். தோட்டத்தில் பழங்கள் திருடி பாட்டிக்குத் தருவதும், பின்னர் அம்மாவிடம் திட்டு வாங்குவதுமாக வரும் துர்கா பாத்திரம் ஏற்ற பெண்ணை எப்படித்தான் அம்மாவின் ஜாடையிலேயே தேடிப்பிடித்தார்களோ! அப்பாவும் சின்னவன் அப்புவும் கூட ஒரே ஜாடை! அப்பு பிறந்தவுடன் நல்லதே நடக்கும் என்று …

Continue reading ஒரு எளிய பாதையின் பாடல்…

கோடுகள்

ஓவியம் வரைகிறாய்கோடு கோடாய்கோடுகள் புற்கள் ஆகும் அதிசயம்!கோடுகள் கிழவியின் மயிராகிறதுகோடுகள் நிலவும் பரிதியும்கோடுகள் மானாகும் முயலாகும்கோடுகள் பறவையும் கிழிஞ்சலும்கோடுகளே நீயும் நானுமெனநாமே ஒரு கோட்டோவியமாய்! உன் கோடுகளுக்குள்ள தூரத்தைஎப்படி முடிவு செய்கிறாய்?புற்களுக்கு ஒரு கணக்குகிழவிக்கு ஒரு கணக்குநிலவு பரிதி புள்ளி மான்முயல் பறவை கிழிஞ்சல்என தூரங்கள் வெவ்வேறாய்...இருபுள்ளியின் இடையிலுள்ளமிகச்சிறிய தூரத்தைக் கோடு என்கிறது அறிவியல்!இனி, உனக்கும் எனக்குமுள்ள தூரம் தான் கோடா? உன் ஓவியத்தில் நான் ரசிப்பதுகோடுகளை அல்ல...அவை நிரப்பாமல் விட்ட இடைவெளியை!